ரூ.100 கோடி வசூல் செய்த சூப்பர் ஹிட் படத்தின் இயக்குனருடன் மீண்டும் சிவகார்த்திகேயன்..?

  • IndiaGlitz, [Sunday,May 21 2023]

ரூ.100 கோடி வசூல் செய்த சிவகார்த்திகேயன் படத்தை இயக்கிய இயக்குனருடன் அவர் மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ’டான்’. சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி அடுத்ததாக ரஜினியின் படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவர் சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவுள்ளார் என தெரிகிறது. இது குறித்து ஆரம்பகட்ட பேச்சு வார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் அவர் சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

2024 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி அதே ஆண்டு இறுதியில் இந்த படத்தை வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அயலான்’ மற்றும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் ’எஸ்கே 21’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.