close
Choose your channels

அறிவிப்புக்கு முன்பே மிகப்பெரிய தொகைக்கு வியாபாரமான சிவகார்த்திகேயன் படம்..!

Wednesday, August 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாக முன்னரே அந்த படத்தின் பாடல்கள் உரிமை மிகப் பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்கே 21’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் இசை உரிமையை பிரபல ஆடியோ நிறுவனம் ஒன்று மிகப்பெரிய தொகைக்கு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபகாலமாக அனிருத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி வருகிறது என்பது தெரிந்ததே. அது மட்டுமின்றி சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் இணைந்த படங்களின் அனைத்து பாடல்களையும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. எனவே இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தொகைக்கு ஆடியோ உரிமை விற்பனை ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் முறையான அறிவிப்பு வெளியாக முன்னரே அந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமை விற்பனையானது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment