சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 5 படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன்? சம்பளம் இத்தனை கோடியா?

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பிக்சர்ஸ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’, தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படம் உள்பட ஒரு சில திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் 5 திரைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் தற்போது ’டாக்டர்’ படத்தை முடித்துவிட்டார் என்பதும், இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ‘அயலான்’, ‘டான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு தொடர்ச்சியாக 5 படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், ஐந்து படங்களுக்கும் சேர்த்து ரூபாய் 75 கோடி அவருக்கு சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரே நிறுவனத்திற்கு சிவகார்த்திகேயன் 5 திரைப்படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ செய்தி வெளியில் வரும்வரை பொறுமை காப்போம்.