விஜய் பாணியில் தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்!

  • IndiaGlitz, [Monday,July 12 2021]

தளபதி விஜய்யின் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது தெரிந்ததே. இந்த நிலையில் விஜய் பாணியில் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தையும் தெலுங்கு இயக்குனர் ஒருவரே இயக்க இருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் தெலுங்கில் வெளியான திரைப்படம் ’ஜாதி ரட்னலு’. ரூ.5 கோடி பட்ஜெட்டில் மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் 65 கோடிக்கு மேல் வசூல் ஆகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அனுதீப் என்பவர் இயக்கி இருந்த நிலையில் இவர்தான் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை பிரபல நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் படங்கள் தெலுங்கில் நல்ல வசூலை குவித்து வரும் நிலையில் தற்போது நேரடி தெலுங்கு திரைப்படத்தில் அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழுக்க முழுக்க காமெடி அம்சம் கொண்ட இந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ’ரஜினி முருகன்’ படத்தில் பார்த்த சிவகார்த்திகேயனை பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

More News

வேற லெவலுக்கு செல்கிறது சூர்யாவின் 'சூரரை போற்று': அதிகாரபூர்வ அறிவிப்பு

சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவான 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் ஓடிடியில் ரிலீஸ்

அரசியலுக்கு வருகின்றேனா? மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கு முன் ரஜினி பேட்டி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார். இதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்களும்

ஆன்லைனில் படிக்கும் மாணவர்களுக்காக விஜய் ரசிகர்கள் செய்த உதவி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் திறக்கவில்லை என்பதை அடுத்து ஆன்லைனில் தான் வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே

எல்.முருகனை கொண்டாடுங்கள்: சூர்யா, கார்த்தி, விஷாலுக்கு தமிழ் நடிகை கோரிக்கை!

தமிழகத்தைச் சேர்ந்த எல் முருகன் சமீபத்தில் மத்திய இணை அமைச்சராக பதவி ஏற்ற நிலையில் அவரை சினிமாத்துறையினர் கொண்டாட வேண்டும் என நடிகையும், பாஜக பிரபலமுமான காயத்ரி ரகுராம் தனது சமூக வலைதளப் பக்கத்தில்

மோஷன் போஸ்டரை 'வலிமை' படத்தின் மேலும் ஒரு அப்டேட்: இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

தல அஜித்தின் 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் சற்று முன்னர் வெளியாகி இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் அஜித் ரசிகர்கள் இதனை டிரண்டுக்கு கொண்டு வந்து விட்டனர்