close
Choose your channels

அறிமுக இயக்குனர் படம்.....! பிரபல இசையமைப்பாளருடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்....!

Thursday, August 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அறிமுக இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அயலான் மற்றும் டான் படங்களை தொடர்ந்து, சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் அறிமுக இயக்குனர் அசோக். இவர் இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஆவார். சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே பெரும்பாலும் அனிருத் மற்றும் டி.இமான் தான் இசையமைப்பாளர்களாக இருப்பார்கள். ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களுக்கு இமானும், எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கி சட்டை, டாக்டர் உள்ளிட்ட படங்களுக்கு அனிருத்-ம் இசையமைத்திருப்பார்கள்.

இந்நிலையில் "சிங்கப்பாதை" என பெயரிட்டுள்ள சிவகார்த்திகேயனின் புதிய படத்திற்கு, இசையமைப்பாளராக டி.இமான் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் கதாநாயகி மற்றும் இதர கலைஞர்கள், தொழிநுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment