close
Choose your channels

சிவகார்த்திகேயன், நயன்தாராவுடன் ராதிகா: வைரலாகும் புகைப்படம்

Tuesday, October 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா' சமீபத்தில் வெளியான நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் ராதிகா சரத்குமார் படப்பிடிப்பின் இடையே எடுத்த ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

சிரித்த முகத்துடன் சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் ராதிகா இருக்கும் இந்த புகைப்படம், இந்த படத்தில் மூவரின் கெட்டப்பையும் வெளிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை சிவகார்த்திகேயன், நயன்தாரா ரசிகர்கள் அதிகளவில் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதால் இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

இந்த படத்திற்கு 'ஜித்து ஜில்லாடி' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment