ரஜினி, அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? அடுத்த தளபதிக்கு தகுதியாகுகிறாரா?

  • IndiaGlitz, [Wednesday,July 31 2024]

தளபதி விஜய்யின் சில திரைப்படங்கள் அஜித் படங்கள் வெளியாகும் போது வெளியானது என்பதும் அதேபோல் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு தகுதியானவர் தளபதி விஜய் தான் என்றும் அவரது ரசிகர்கள் கூறி ரஜினி ரசிகர்களுடன் மோதி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் ரஜினி மற்றும் அஜித் உடன் விஜய் ரசிகர்கள் மோதி வரும் நிலையில் தற்போது ரஜினி மற்றும் அஜித் படங்களுடன் மோத சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான ’அமரன்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதே தீபாவளி தினத்தில் தான் ரஜினியின் ’வேட்டையன்’ படமும் வெளியாக இருப்பதாக கூறப்படுவதால் இரு படங்களும் ஒரே நாளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதே நாளில் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படமும் வெளிவர வாய்ப்பு உள்ளதால் மும்முனை போட்டி ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அதேபோல் அஜித்தின் ’குட் பேட் அக்லி’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே தினத்தில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ’எஸ்கே 23’ படமும் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே தளபதி விஜய் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு, முழு நேர அரசியல்வாதிவிட்டால், தளபதியின் இடத்தை பிடிப்பதற்காக ரஜினி மற்றும் அஜித் உடன் சிவகார்த்திகேயன் மோதுவதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' நாயகியின் புதிய போஸ்டர்.. இன்று என்ன விசேஷம்?

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'கேம் சேஞ்சர்' படத்தில் நாயகியாக நடித்துள்ள கைரா அத்வானியின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ராமனுக்கு சீதை போல எனக்குன்னு வந்தா என் ஜெகதாம்பா.. 'ஜமா' டிரைலர்..!

வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி 'ஜமா' என்ற திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

விஷால் - லைகா இடையிலான வழக்கில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

லைகா நிறுவனத்தின் மீது நடிகர் விஷால் தாக்கல் செய்த வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'ஜெயிலர் 2' படத்தில் நான் நடிக்கிறேன்.. முதல் பாகத்தில் நடித்த பிரபல நடிகர் தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான 'ஜெயிலர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று கூறப்படுகிறது.

அட்லியின் அடுத்த படத்தில் சல்மான்கானும் இல்லை, கமல்ஹாசனும் இல்லை.. இந்த தமிழ் நடிகரா?

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்த 'ஜவான்' திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாகியும் அட்லியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.