சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் படம் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட நிலையில் இது குறித்த பதிவை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு சில படங்களை தயாரித்து வருகிறார் என்பதும் அவரது தயாரிப்பில் ’நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ ’வாழ்’ ’டாக்டர்’ ’டான்’ உள்ளிட்ட படங்கள் வெளியாகின என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் சூரி, அன்னாபென் நடிப்பில் உருவாகி உள்ள ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் நிலையில் இந்த படத்தை பிஎஸ் வினோத் ராஜ் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே நயன்தாரா தயாரிப்பில் உருவான ’கூழாங்கல்’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’கொட்டுக்காளி’ திரைப்படம் ருமேனியாவின் டிரான்ஸில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளதை சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். ஏற்கனவே வினோத் ராஜ் இயக்கிய ’கூழாங்கல்’ திரைப்படமும் இதே திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ’கொட்டுக்காளி’ திரைப்படம் 74ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வானது என்பதும், முதல் முதலாக ஒரு தமிழ் படம் இந்த திரைப்பட விழாவில் தேர்வு பெற்ற பெருமையை இந்த படம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
I'm very happy to share that, after receiving a fantastic response from the @berlinale, our film #Kottukkaali has been selected for the official competition of the Transilvania International Film Festival - @TIFFromania 👍😊@sooriofficial @PsVinothraj @benanna_love @KalaiArasu_… pic.twitter.com/irs4UXdSxT
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 20, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com