பாலிவுட் செல்லும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர்.. கரண் ஜோஹர் தயாரிப்பா?

  • IndiaGlitz, [Tuesday,October 08 2024]

மொத்தம் இரண்டே படங்கள். அதில் ஒன்று சிவகார்த்திகேயன் படத்தை இயக்கிய இயக்குனரின் அடுத்த படம் பாலிவுட் திரைப்படம் என்றும், இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் யோகி பாபு நடித்த 'மண்டேலா’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மடோன் அஸ்வின் தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான நிலையில், இந்த படம் தேசிய விருதையும் பெற்றது. மேலும் ’மகாராஜாதிரைப்படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவான ’குரங்கு பொம்மை’ திரைப்படத்திற்கு இவர் தான் வசனம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து, சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில், தற்போது அடுத்ததாக அவர் பாலிவுட் திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாக இருக்கும் பாலிவுட் திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.