'உங்க அன்பான மனசுக்கு'.. சிவகார்த்திகேயன் பட இயக்குனரின் திருமணம்.. குவியும் வாழ்த்துக்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த படத்தின் இயக்குனருக்கு திருமணம் ஆகி உள்ள நிலையில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படத்தை இயக்கியவர் சிபி சக்கரவர்த்தி என்பதும் முதல் படத்திலேயே அவர் 100 கோடி ரூபாய் வசூல் குவிக்கும் வெற்றி படமாக இயக்கியிருந்தார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கும் நிலையில் அவரது திருமணம் நேற்று நடந்தது. இந்த திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன், பால சரவணன் ஆகியோர் தங்கள் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளனர்.
குறிப்பாக பாலசரவணன் தனது சமூக வலைத்தளத்தில் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் என்று கூறி ’எனது அன்பிற்கு அன்பான நண்பர் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி அவர்களே, உங்கள் அன்பான மனசுக்கு எப்பவும் போல இன்னும் மென்மேலும் சிறப்பான மாபெரும் வெற்றியை அடைவீர்கள்’ என்று வாழ்த்தி உள்ளார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கும் என்றும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
Happpyyyy Married life to My Anbirku Anbana Dearesttt @Dir_Cibi Broooo ungal anbana manasuku epavum pola innum men melum sirappana maaberum vetrihalai adaiveenga broooo...❤️❤️❤️💐💐💐👍🏾👍🏾👍🏾 pic.twitter.com/NpRYs78zQ7
— Bala saravanan actor (@Bala_actor) September 4, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com