2ஆம் பாகமாகும் சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் படம்: அதே இயக்குனர் அதே தயாரிப்பாளர்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ’ரெமோ’ ஆகிய இரண்டு படங்களில் ஒன்று இரண்டாம் பாகமாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி சிவகார்த்திகேயனின் மற்றொரு சூப்பர் ஹிட் படமான ’ரஜினிமுருகன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பொன்ராம் இயக்கி இருந்தார் என்பதும் இந்த படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரூபாய் 22 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் ரூபாய் 51 கோடி வரை வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ’ரஜினி முருகன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் பொன்ராம் இயக்க இருப்பதாகவும் இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அவரது மார்க்கெட் கோலிவுட்டில் உச்சம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments