சிவகார்த்திகேயன் கொடுத்த இரண்டு உறுதிமொழிகள்

  • IndiaGlitz, [Saturday,March 31 2018]

தமிழ் சினிமாவை பொருத்தவரையில் கடந்த சில வருடங்களாக டாஸ்மாக் காட்சிகள் அதிகம் இடம்பெறுகின்றன. டாஸ்மாக் கடையில் பாடல்கள், சண்டைக்காட்சிகள், காமெடி காட்சிகள் மட்டுமின்றி படத்தின் தலைப்புக்கே மதுவகைகளின் பெயர் வைக்குள் அளவுக்கு டாஸ்மாக் தமிழ் சினிமாவோடு ஒன்றியுள்ளது.

இந்த நிலையில் இனிமேல் தனது படங்களில் டாஸ்மாக் காட்சிகள் இருக்காது என்று சிவகார்த்திகேயன் உறுதியளித்துள்ளார். முன்பெல்லாம் டாஸ்மாக் காட்சிகளில் நடிப்பதை ஒரு ஜாலியாக நினைத்ததாகவும்,  ஆனால் இப்போதுதான் அதன் கொடிய தாக்கம் தனக்கு புரிந்திருப்பதாகவும் கூறியுள்ள சிவகார்த்திகேயன் டாஸ்மாக் காட்சி தனக்கு மட்டுமின்றி தனது படத்திலேயே இருக்காது என்று கூறியுள்ளார்.

மேலும் அதேபோல் தனது படத்தில் இனிமேல் பெண்களை கிண்டல் செய்யும் வகையிலான காட்சிகளும் இருக்காது என்று அவர் உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில் தனது படத்தின் பாதி காட்சிகளை டாஸ்மாக்கில் படமாக்கும் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

காவிரியை அடுத்து ஸ்டெர்லைட் பிரச்சனைக்கும் குரல் கொடுத்த ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறிய கருத்தை ஏற்கனவே பார்த்தோம்.

ஆன்மீக அரசியல் என்பது மிகப்பெரிய பொய்: ரஜினியை போட்டுத் தாக்கும் ஆ.ராசா

ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வரவுள்ளதாகவும், தன்னுடைய அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் கூறியுள்ள நிலையில் அவரது ஆன்மீக அரசியலை பல அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.

கிறிஸ்டோபர் நோலனிடம் கமல் மன்னிப்பு கேட்டது ஏன் தெரியுமா?

ஹாலிவுட் சூப்பர் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் அவர்களை கமல் சந்திக்கவுள்ளார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அந்த சந்திப்பு தற்போது நடைபெற்றுவிட்டது.

மிஸ்டர் இந்தியா இயக்குனருக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்

பாலிவுட் திரையுலகில் 'மிஸ்டர் இந்தியா' உள்பட பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சேகர் கபூர், இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானவர்.

விஜய் வில்லனுக்கு ஜோடியாக்கும் ஸ்ருதிஹாசன்

விஜய் நடித்த துப்பாக்கி என்ற வெற்றி படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் வித்யூத் ஜம்மாவால். இவர் பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.