'சீமராஜா'வுக்கு அடுத்த சிவகார்த்திகேயன் பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,August 17 2018]

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கியுள்ள 'சீமராஜா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சிவகார்த்திகேயன் முதன்முதலாக 'கனா' என்ற படத்தை தயாரித்து வருகிறார் என்பது தெரிந்தது.

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும் பிரபல பாடகருமான அருண்காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் தந்தை-மகள் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். மேலும் சிவகார்த்திகேயனும் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் 'கனா' படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை சிவகார்த்திகேயன் சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வரும் 23ஆம் தேதி வெளிவரவுள்ளது.

நடிகர் தர்ஷன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், திபு நினன் தாமஸ் இசையில், இளையராஜா கலையில் ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.

More News

பீச் என்ன பிரஸ்மீட் வைக்கும் லொகேஷனா? கஸ்தூரி

மெரீனா பீச் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை என்பதுதான். ஆனால் அதற்கு அடுத்ததாக ஞாபகம் வருவது அண்ணா மற்றும் எம்ஜிஆர் சமாதிதான்

'செக்க சிவந்த வானம்' பொன்னியின் செல்வன் கதையா?

மணிரத்னம் ஏற்கனவே இயக்கிய ஒருசில படங்கள் வரலாறு மற்றும் சரித்திர சம்பவங்களை தழுவி இருக்கும் என்பது அவரது படத்தை ஆழமாக பார்ப்பவர்களுக்கு புரிந்திருக்கும்.

சொந்த மாநில மக்களுக்கு நயன்தாரா செய்த மிகப்பெரிய உதவி

கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் நடிகை நயன்தாராவின் சொந்த மாநிலம் கேரளா என்பது தெரிந்ததே. இந்த நிலையில்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் நேற்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானதை அடுத்து அவரது உடல் அவரது வீட்டிற்கு நேற்று எடுத்து செல்லப்பட்டது.

ஆகஸ்ட் 19ஆம் தேதி  சென்னையில் படப்பிடிப்புகள் ரத்து

இம்மாதம் 19ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னையில் நடைபெறும் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.