சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தின் ரிலீஸ் உரிமை: அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாகும் என செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக சமீபத்தில் தான் சிவகார்த்திகேயன் தனது பகுதியில் டப்பிங் பணியை முடித்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சற்றுமுன் ‘மாவீரன்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் அடுத்த படம் ‘மாவீரன்’ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ள 'மாவீரன்’ படத்தில் மிஷ்கின், யோகி பாபு, சுனில் உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் நடிகை சரிதா ஒரு முக்கிய குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
We are Elated to announce that market leader @RedGiantMovies_ will be releasing #Maaveeran across TamilNadu! 😇👍🏼💪@Siva_Kartikeyan #MaaveeranFromJuly14th #VeerameJeyam @madonneashwin @AditiShankarofl @iamarunviswa @DirectorMysskin #Saritha @suneeltollywood @iYogiBabu… pic.twitter.com/1ln2Fz6BUY
— Shanthi Talkies (@ShanthiTalkies) June 9, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments