சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. மிரள வைக்கும் மேக்கிங் வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,April 22 2023]

சிவகார்த்திகேயன் நடிப்பில், தேசிய விருது பெற்ற ’மண்டேலா’ என்ற திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வந்த ’மாவீரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘மாவீரன்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 11 என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு உள்ள நிலையில் இந்த வீடியோவில் உள்ள காட்சிகளை பார்க்கும்போது மிரள வைக்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் திரையுலக வாழ்வில் இந்த படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ள இந்த படத்தில் மிஷ்கின், யோகி பாபு, சுனில் உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் நடிகை சரிதா ஒரு முக்கிய குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

ஷாந்தனுவின் 'இராவண கோட்டம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகர் ஷாந்தனு பாக்யராஜ் நடிப்பில் 'மதயானை கூட்டம்' இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவான 'இராவண கோட்டம்' என்ற திரைப்படம் ரிலீசுக்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை

இறந்த நடிகரை உயிர்த்தெழ வைக்கும் ஷங்கர்.. புதிய டெக்னாலஜி பயன்படுத்த திட்டம்..!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 'இந்தியன் 2 திரைப்படத்தில் மறைந்த நடிகர்கள் விவேக் மற்றும் நெடுமுடி வேணு நடித்திருந்த நிலையில் இருவரையும் இந்த படத்தில் புதிய தொழில்நுட்பம்

ஒவ்வொரு பறவைக்கும் பறக்க முடிஞ்ச உயரம்ன்னு ஒன்னு இருக்கு.. 'பர்ஹானா' டீசர்..!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'பர்ஹானா' என்ற திரைப்படம் வரும் மே 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

மீண்டும் ட்விட்டர் புளூடிக் பெற்ற பிரபலம்.. ரஜினி, விஜய் பெறுவது எப்போது?

 பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் கொடுத்து வாங்கியவுடன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார் என்பதும் அவற்றில் ஒன்று புளூடிக் வைத்து இருப்பவர்கள் சந்தா பணம்

விஜய் மகன் சஞ்சய் இயக்கிய குறும்படம்.. செம்ம தரமான காட்சிகள்..!

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய குறும்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த குறும்படத்தை பார்த்து ரசிகர்கள் தரமான படம் என்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட காட்சிகள் உள்ளது என்று