சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' ஓடிடி ரிலீஸ் உரிமை இத்தனை கோடியா? இதுவரை இல்லாத உச்சம்!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் அதற்குள் தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தேசிய விருது பெற்ற ’மண்டேலா’ என்ற படத்தை இயக்கிய மடோனா அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாவீரன்’.

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதிஷங்கர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் வியாபாரம் தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் பிரைம் பெற்றிருப்பதாகவும் இந்த படத்திற்காக அந்நிறுவனம் 34 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயன் திரைப்படம் ஒன்றின் ஓடிடி உரிமை இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனையாகி இருப்பது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது.

தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.