கிரிக்கெட் 'கனா' நிறைவேற சிவகார்த்திகேயன் - அஸ்வின் அழைப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' திரைப்படம் வெளியான பின்னர் பல இளம்பெண்களுக்கு தாங்களும் ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக வேண்டும் என்ற கனவு ஏற்பட்டது. வருங்கால வீராங்கனைகளாக மாற விரும்பும் இளம்பெண்களுக்கு தற்போது ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் நடத்தவுள்ள 'சம்மர் ஸ்லாம் 3.0' என்ற கிரிக்கெட் கோச்சிங் நிலையத்தை இன்று நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்துள்ளார். 14 வயது உட்பட்ட சிறுவர், சிறுமியர் ஒரு குழுவாகவும், 14 வயதுக்கு மேற்பட்ட சிறுவர் சிறுமியர்களுக்கு ஒரு பிரிவாகவும் இங்கு கோச்சிங் வழங்கப்படவுள்ளது.
மேலும் கோச்சிங் வரும் சிறுவர் சிறுமியர்களுக்கு அஸ்வினும் பயிற்சி அளிக்கவுள்ளார். எனவே கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற 'கனா' இருப்பவர்கள் இந்த கோச்சிங் நிலையத்தில் சேரலாம் என சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
Happy to launch #SummerSlam 3.0, the summer coaching camp of Gen Next Cricket Academy, mentored by our very own @ashwinravi99 . If you have a #Kanaa to make it big in cricket, this is for you. Reach out to @gennextcricket @sudscricket . All the best team! ?????? pic.twitter.com/0o93j2Uguh
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) March 13, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com