close
Choose your channels

சிவகார்த்திகேயன் தோற்றத்தில் திடீர் மாற்றம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Tuesday, March 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரை தான் நடித்த படங்களில் தனது உயரத்திற்கு ஏற்ற எடையுடன் இருந்த தான் இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது அவர் திடீரென ஒல்லிக்குச்சியாக மாறி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

’டாக்டர்’ மற்றும் ’அயலான்’ ஆகிய படங்களை முடித்து விட்ட சிவகார்த்திகேயன் தற்போது சிபிசக்கரவர்த்தி இயக்கும் ’டான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அவர் கல்லூரி மாணவராக நடிப்பதாகவும் இதனை அடுத்து அவர் தனது உடல் எடையை குறைத்து ஒல்லிக்குச்சியாக மாறி விட்டதாகவும் தெரிகிறது

சமீபத்தில் தனது நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழாவில் குடும்பத்துடன் பங்கேற்று கொண்ட சிவகார்த்திகேயன் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களில் சிவகார்த்திகேயன் உடல் எடை மிகவும் குறைந்து ஒல்லிக்குச்சி போல் காட்சி தருவதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘டான்’ படத்திற்காகத்தான் இப்படி ஒல்லியாக மாறிவிட்டார் என்பதை அறிந்த பின்னர் தான் அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்

ஒரு கேரக்டர் சரியாக வர வேண்டுமென்றால் அதற்காக எந்த அளவுக்கும் ரிஸ்க் எடுக்க தமிழ் திரையுலகில் பலர் உள்ளனர். அந்த வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார் என்பதும் மேலும் முக்கிய வேடத்தில் குக் வித் கோமாளி புகழ், ஷிவாங்கி உள்பட பலர் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment