கருணாநிதியின் உடலுக்கு சிவகார்த்திகேயன் அஞ்சலி

  • IndiaGlitz, [Wednesday,August 08 2018]

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலில் அவருக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் வரிசையில் காத்திருக்கும் நிலையில் திரையுலக பிரமுகர்களும் அவருக்கு இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சற்றுமுன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினர்களுடன் ராஜாஜி ஹாலுக்கு வந்து கருணாநிதியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனும் தனது மனைவியுடன் வருகை தந்து முதுபெரும் தலைவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்

கலைஞர் அய்யா குறித்து பேசுவதற்கே ஒரு தகுதி வேண்டும் என்றும், பல வருடங்களுக்கு முன்னரே அவர் எடுத்த நடவடிக்கைகளால் தான் என்னை போன்ற சாதாரணமானவர்களும் சினிமாவில் காலூன்ற முடிந்ததாகவும், அவருடைய உடல் மட்டுமே ஓய்வு எடுத்து கொண்டதாகவும், அவருடைய கொள்கைகளுக்கு ஓய்வே இல்லை என்றும் சிவகார்த்திகேயன் புகழாரம் சூட்டினார்.

மேலும் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் ராதாரவி, நடிகர் மயில்சாமி உள்பட பல திரையுலக பிரபலங்கள் இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர்.