ரெமோ ஃபர்ஸ்ட்லுக் மற்றும் சிங்கிள் டிராக் குறித்த தகவல்கள்

  • IndiaGlitz, [Thursday,June 09 2016]

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ரெமோ' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் தீம் மியூசிக் ரிலீஸ் தேதி 'கபாலி' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக மாற்றப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் தீம் மியூசிக் வரும் 23ஆம் தேதி வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.,

மேலும் வரும் ஜூலை 1ஆம் தேதி சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள SIIMA விருது வழங்கும் விழாவில் இந்த படத்தின் 'செஞ்சிட்டாலே என்ற சிங்கிள் டிராக் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரித்து வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.