ஆகஸ்ட் 2 முதல் 'ரெமோ'வின் முக்கிய பணி தொடக்கம்

  • IndiaGlitz, [Monday,July 25 2016]

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக், மோஷன் போஸ்டர், ரெமோ நீ காதலன் சிங்கிள் டிராக் ஆகியவை ரசிகர்களின் மாபெரும் ஆதரவை பெற்றுள்ளது.
மேலும் இந்த படத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்து ரிலீஸ் தேதியும் செப்டம்பர் 2 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் வியாபாரம் ஆகஸ்ட் 2 முதல் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற விரும்புவர்கள் அணுக வேண்டிய மொபைல் எண் மற்றும் இமெயில் முகவரியும் சமூக இணையதளத்தில் வெளிவந்துள்ளது.
சிவகார்த்திகேயனின் முந்தைய படமான 'ரஜினிமுருகன்' விநியோகிஸ்தர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்ததால் 'ரெமோ' படம் நல்ல விலைக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார்.