ஆஸ்கார் வின்னரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த 'ரெமோ' குழுவினர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்' இவ்வருடம் பொங்கல் திருநாளில் வெளியாகி சூப்பர் ஹிட் பெற்றதால் இதே வெற்றி ஜோடி நடித்து வரும் அடுத்த படமான 'ரெமோ' படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் பெண் வேடம் உள்பட மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியுந்தருவாயில் உள்ள நிலையில் இன்று காலை 10.30 மணி முதல் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை 24ஏம் ஸ்டுடியோஸ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது. மேலும் இந்த படத்தில் மேக்கப் கலைஞர் உள்பட பல ஹாலிவுட் கலைஞர்கள் பணிபுரிந்துள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் மிகச்சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆஸ்கார் விருது பெற்ற ரசூல்பூக்குட்டியின் மேற்பார்வையில் டப்பிங் பணிகள் முழுவதும் நடைபெறவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் உள்பட அனைவரும் அவருடைய வழிகாட்டுதலின்பேரில்தான் டப்பிங் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்து வரும் இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். அனிருத்தின் அதிரடி இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் சிங்கிள் பாடலான 'செஞ்சிட்டாளே' வரும் ஜூலை 1ஆம் தேதி சிங்கப்பூரில் வெளியாகவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout