close
Choose your channels

சிவகார்த்திகேயனின் ரெமோவும் கோவை-மதுரையும்!!!

Sunday, August 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் கடந்த வாரம் முதல் தொடங்கிவிட்டது. சிவகார்த்திகெயனின் முந்தைய படமான 'ரஜினிமுருகன்' சூப்பர் ஹிட் வசூல் படங்களில் ஒன்றாக அமைந்ததால் அவருடைய அடுத்த படமான 'ரெமோ' படத்தின் ரிலீஸ் உரிமையை வாங்க விநியோகிஸ்தர்களிடையே பெரும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் கோவை ஏரியா ரிலீஸ் உரிமையை திருப்பூர் சுப்பிரமணியன் அவர்கள் பெரும் தொகை கொடுத்து பெற்றுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் தற்போது மதுரை ஏரியாவின் ரிலீஸ் உரிமையின் விற்பனையும் முடிந்துள்ளது. இந்த உரிமையை ஜி.என்.அழகர்சாமியின் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் பெற்றுள்ளது.
இதேபோல் மற்ற ஏரியாக்களின் உரிமை குறித்த வியாபாரம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. மிக விரைவில் இதுகுறித்த விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். 24 ஏஎம் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment