சிவகார்த்திகேயனுடன் கனெக்ட் ஆன தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்!

  • IndiaGlitz, [Thursday,December 19 2019]

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த கேரக்டரில் நடந்த நிகழ்வுகள் அப்படியே நிஜ கிரிக்கெட் வீரர் ஒருவரின் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்பட பலர் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கிய திரைப்படம் ‘கனா’. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கிரிக்கெட் வீரராகவும் அதன்பின் கண்ணில் அடிபட்டதால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று சில ஆண்டுகள் கழித்து, பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் நடித்திருப்பார்

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் மார்க் பவுச்சர் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக விக்கெட் கீப்பராக தென்னாப்பிரிக்கா அணியில் விளையாடிய நிலையில் அவருடைய கண்களில் அடிபட்டதை அடுத்து கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வுபெற்றார். இந்த தற்போது தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

கனா படத்தில் சிவகார்த்திகேயன் கேரக்டரில் நடந்த நிகழ்வுகள் அப்படியே தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் மார்க் பவுச்சர் அவர்களின் நிஜ வாழ்வில் நடந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளிப்பதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்