கவுதம் மேனனுடன் இணைந்த சிவகார்த்திகேயன்: வீடியோ வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் வாசுதேவ் மேனன் முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்த மியூசிக் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
கடந்த சில நாட்களாக கௌதம் மேனன் இயக்கிய மியூசிக் வீடியோ ஒன்று வெளியிடப்போவதாக விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வந்தன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அந்த மியூசிக் வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது.
’தடுப்பூசி ஏற்றுவோம், உலகத்தை மாற்றுவோம்’ என்ற கருத்தைக் கூறும் இந்த மியூசிக் வீடியோவில் சிவகார்த்திகேயன். ஜீவா. ஐஸ்வர்யா ராஜேஷ். பாம்பே ஜெயஸ்ரீ. மஞ்சிமா மோகன். சாந்தனு பாக்யராஜ், கலையரசன், ஸ்ரீநிதி சிதம்பரம், காளிதாஸ் ஜெயராம், உள்பட பலர் தோன்றியுள்ளனர்.
இந்த மியூசிக் வீடியோவை இயக்கிய கௌதம் மேனன் மற்றும் பாடலை எழுதிய மதன்கார்க்கி ஆகியோர்களும் இந்த மியூசிக் வீடியோவில் தோன்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த பாடல் சற்று முன் வெளியாகியுள்ள நிலையில் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
https://t.co/7iwMsNIQNb
— Gauthamvasudevmenon (@menongautham) December 11, 2021
Remember how it was. Think of how it can be.#ThadupoosiYetruvom#UlagathaiMaatruvom@Siva_Kartikeyan @JiivaOfficial @aishu_dil @Bombay_Jayashri @mohan_manjima @imKBRshanthnu @kalaiactor @srinidhichid @kalidas700 @akash_megha@singer_karthik @madhankarky pic.twitter.com/JZGQBUqdgG
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments