close
Choose your channels

சிவகார்த்திகேயனின் 18வது படத்தை இயக்கும் இயக்குனர்!

Friday, March 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் தயாரித்த முதல் படமான 'கனா' திரைப்படம் அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான அருண்ராஜா காமராஜாவுக்காகவே தயாரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அந்த படத்தை மிகப்பெரிய வெற்றி அடைய செய்து சிவகார்த்திகேயனுக்கு தனது நன்றிக்கடனை செலுத்தினார் அருண்ராஜா காமராஜ்

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தயாரித்து நடிக்கவுள்ள அடுத்த படத்தையும் அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவராகிய நெல்சன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

இயக்குனர்கள் எம்.ராஜேஷ், ரவிகுமார், பி.எஸ்.மித்ரன் ஆகியோர்கள் இயக்கத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், விரைவில் இயக்குனர்கள் பாண்டிராஜ் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர்களின் இயக்கத்தில் உருவாகவுள்ள படங்களில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் இந்த பட்டியலில் தற்போது நெல்சன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment