சதீஷின் 'நாய்சேகர்' படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்: வேற லெவல் அப்டேட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் பிரபல காமெடி நடிகர் சதீஷ் தற்போது கதாநாயகனாக ’நாய் சேகர்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே
கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருப்பதாகவும் இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் கம்போஸ் செய்திருப்பதாகவும் சதீஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்
மேலும் இந்த பாடலுக்கு நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் பணிபுரிந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சதீஷின் ’நாய் சேகர்’ படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ள வேற லெவல் அப்டேட் தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே விஜய்யின் ’பீஸ்ட்’ உள்பட ஒரு சில படங்களுக்கு சிவகார்த்திகேயன் பாடல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Nanban @Siva_Kartikeyan wrote lyric for a peppy song in our#NaaiSekar ?? Composed by #RockStar @anirudhofficial
— Sathish (@actorsathish) November 30, 2021
Mikka Nandri Nanba ??????
Love u always ?????? #AnirudhSingleForNaaiSekar #AnirudhSingle #SkLyricsInNaaisekar @archanakalpathi @aishkalpathi @KishoreRajkumar pic.twitter.com/Hu4R8NeVLJ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments