சதீஷின் 'நாய்சேகர்' படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்: வேற லெவல் அப்டேட்!

  • IndiaGlitz, [Tuesday,November 30 2021]

தமிழ் திரை உலகின் பிரபல காமெடி நடிகர் சதீஷ் தற்போது கதாநாயகனாக ’நாய் சேகர்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே

கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருப்பதாகவும் இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் கம்போஸ் செய்திருப்பதாகவும் சதீஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

மேலும் இந்த பாடலுக்கு நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் பணிபுரிந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சதீஷின் ’நாய் சேகர்’ படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ள வேற லெவல் அப்டேட் தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே விஜய்யின் ’பீஸ்ட்’ உள்பட ஒரு சில படங்களுக்கு சிவகார்த்திகேயன் பாடல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


More News

முன்னணியில் அபிஷேக்: வரிந்து கட்டி வேலை செய்யும் ஆடியன்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்றும் இந்த வாரம் மொத்தம் பத்து பேர் நாமினேஷன் செய்யப்பட்டு உள்ளனர்

நடிகை நந்திதா ஸ்வேதா அம்மாவை பார்த்ததுண்டா? இதோ வைரல் புகைப்படம்!

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான நந்திதா ஸ்வேதா தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நாம் தமிழர் கட்சி சீமானுக்கு நன்றி தெரிவித்த 'மாநாடு' தயாரிப்பாளர்!

சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக்கிய 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில்

உலகக்கோப்பை வரலாற்றை மாற்றிய கதை… "83" டிரெய்லர் வெளியீடு!

இந்திய அணி உலகக்கோப்பை வரலாற்றையே புரட்டிப்போட்டு கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலகக்கோப்பை வென்று சாதனை படைத்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் “83“.

அஜித்தின் தயக்கத்தை நீக்கிய கே.எஸ்.ரவிகுமார்: ஒரு மலரும் நினைவு!

'வரலாறு' திரைப்படத்தில் அஜித் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு தயக்கம் ஏற்பட்டதாகவும் அந்த தயக்கத்தை சிவசங்கர் மாஸ்டர் அவர்களை உதாரணமாக காட்டி தீர்த்து வைத்ததாகவும் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார்