கடைசியில் 'ஜெயிலர்' படத்தில் சிவகார்த்திகேயனும் இணைந்தாரா?  

  • IndiaGlitz, [Friday,February 17 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பிரபல தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் ஆகியோர் இணைந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இன்னும் ஒரு சில வாரங்களில் படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்றும், அவர் இந்த படத்திற்காக ஒரு பாடலை பாட எழுத உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் எழுதும் பாடல் எப்படி இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

ரஜினிகாந்த், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனி, ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, வினாயகன், யோகிபாபு, மோகன்லால் உள்ளிட்ட பலரது நடிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.