சிவகார்த்திகேயனின் 20வது படம் குறித்த சூப்பர் தகவல்!

  • IndiaGlitz, [Thursday,February 10 2022]

சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள ’டான்’ என்ற திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள இன்னொரு படமான ’அயலான்’ படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் 20-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க இருப்பதாகவும் இந்த படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. சிவகார்த்திகேயன் நேரடியாக தெலுங்கு மொழியில் நடிக்கும் இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

புதுவை, லண்டன் மற்றும் சென்னை உள்பட பல பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று காரைக்குடியில் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காரைக்குடியில் இன்று எளிமையான பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்குவதாகவும், இன்று முதல் ஒரு சில நாட்களுக்கு இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்றும் கூறப்படுகிறது.