சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தின் ஹீரோ இவர் தான்.. சூப்பர் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயனின் எஸ்கே புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று செய்திகள் வெளியானதை பார்த்தோம். அந்த வகையில் சற்றுமுன் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
எஸ்கே புரடொக்சன்ஸ் தயாரித்த ’கனா’, ’நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’, ’வாழ்’, ’டாக்டர்’ மற்றும் ’டான்’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்று இருக்கும் நிலையில் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தில் கலையரசன் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என்றும் அதனை அடுத்து ஃபர்ஸ்ட் லுக் டீசர் மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த படத்தில் கலையரசன் தவிர நடிக்க இருக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் இயக்குனர் உள்பட தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Get ready for the news you've been eagerly anticipating!
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) March 9, 2023
Tomorrow at 10 AM, we'll be revealing the TITLE & FIRSTLOOK of our #SKPProductionNo6, followed by the FIRSTLOOK TEASE at 5 PM. We can't wait to share this film with you all. Stay tuned!@Siva_Kartikeyan @KalaiArasu_ pic.twitter.com/6bqw67vMps
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com