சிவகார்த்திகேயனின் அடுத்த சொந்த படம்.. சூப்பர் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,March 09 2023]

சிவகார்த்திகேயன் இதுவரை 5 சொந்த படங்களை தனது எஸ்கே புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து உள்ள நிலையில் 6வது ஆறாவது தயாரிப்பு திரைப்படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர் மட்டுமின்றி பாடலாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவரது எஸ்கே புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான முதல் திரைப்படமான ‘கனா’ என்ற படத்தை அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான அருண்ராஜா காமராஜ் இயக்கியிருந்தார்.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இதனை அடுத்து அவர் ’நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ ’வாழ்’ ’டாக்டர்’ மற்றும் ’டான்’ ஆகிய திரைப்படங்களை தயாரித்திருந்தார்.

இந்த நிலையில் எஸ்கே புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இதுகுறித்த வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனே நடிப்பாரா? அல்லது வேறு பிரபல நடிகர் யாரேனும் நடிக்க உள்ளார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

More News

தயாரிப்பாளர் வி.ஏ.துரையிடம் போனில் பேசிய ரஜினிகாந்த்: என்ன சொன்னார் தெரியுமா?

மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர் வி.ஏ துரையிடம் போனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளன. 

ஆர் ஜே பாலாஜியின் 'ரன் பேபி ரன்': டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் தேதி..!

ஆர்ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் தமிழ் ஆக்‌ஷன் திரில்லர் 'ரன் பேபி ரன்' திரைப்படம், மார்ச் 10, 2023 முதல்,

நடிகை நக்மாவின் வங்கிக்கணக்கில் ரூ.1 லட்சம் மோசடி.. அதிர்ஷ்டவசமாக தப்பித்த பெரும் தொகை..!

நடிகை நக்மாவின் வங்கி கணக்கில் இருந்து மோசடி நபர் ஒருவர் சுமார் ஒரு லட்ச ரூபாய் எடுத்துவிட்டதாகவும் ஆனால் நக்மா சுதாரித்துக் கொண்டதை அடுத்து பெரும் தொகை தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

வைரமுத்துவின் மகளிர் தின வாழ்த்துக்கு சின்மயி ரியாக்சன்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்கள்..!

 நேற்று மார்ச் 8ஆம்  தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உ

ஒரே நேரத்தில் இரண்டு படங்கள்.. நடிகர் சூர்யாவின் மாஸ் பிளான்..!

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில்