அடேங்கப்பா.. ஒரு படத்திற்கு இத்தனை உழைப்பா? சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 21' வீடியோ சூப்பர்..!

  • IndiaGlitz, [Monday,February 12 2024]

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ’எஸ்.கே 21’ படத்தின் முக்கிய வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அந்த வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படம் மற்ற சிவகார்த்திகேயன் படம் போல் காமெடி மற்றும் குடும்ப அம்சத்துடன் இருக்காது என்றும் முழுக்க முழுக்க ஒரு சீரியஸான ராணுவ வீரரின் கதை அம்சமாக இருக்கும் என்று கூறப்பட்டது போல் இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் தெரிகிறது.

ஒரு ராணுவ வீரருக்கான கேரக்டரில் நடிக்க எந்த அளவுக்கு தயாராக வேண்டும் என்பதை புரிந்து கொண்டு மிக கடுமையாக உடற்பயிற்சி செய்து அந்த கேரக்டருக்கு சிவகார்த்திகேயன் தகுதி பெற்றுள்ளார் என்பது இந்த வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. மொத்தத்தில் இந்த வீடியோவில் சிவகார்த்திகேயனின் அயராத உழைப்பு முழுமையாக தெரிகிறது என்பதால் அவரது உழைப்பு கேட்ட வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த வீடியோவின் இறுதியில் பிப்ரவரி 16ஆம் தேதி டைட்டில் டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இன்னும் நான்கு நாட்களில் இந்த படத்தின் டைட்டில் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சிவகார்த்திகேயன், சாய்பல்லவி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தால் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.