சிவகார்த்திகேயனுக்கு ஏற்ற செம டைட்டில்: 'எஸ்கே 20' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

  • IndiaGlitz, [Thursday,June 09 2022]

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’எஸ்கே 20’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ மற்றும் ’டான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த இரண்டு படங்களும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் அவரது அடுத்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் தமிழ், தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு 'பிரின்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் சிவகார்த்திகேயனுக்கு ஏற்ற செமையான டைட்டில் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே ’டாக்டர்’ ’டான்’ ஆகிய டைட்டில்கள் சிறப்பாக அமைந்ததை அடுத்து மீண்டும் ஒரு சூப்பர் டைட்டில் அவரது படத்திற்கு கிடைத்துள்ளது.

ஏற்கனவே சிவகார்த்திகேயனை அவருடைய ரசிகர்கள் பிரின்ஸ் சிவகார்த்திகேயன் என்று அழைத்து வரும் நிலையில், தற்போது அதுவே அவரது படத்திற்கு டைட்டிலாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விக்கி-நயன் திருமணத்திற்கு எங்களையும் கூப்பிட்டிருக்கலாம்: நெருங்கிய உறவினர் வருத்தம்

 இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணம் இன்று காலை மிகச் சிறப்பாக நடந்ததை அடுத்து பல இந்திய திரையுலக பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு

இது உண்மையிலேயே ரொம்ப மோசம்: ஆத்திரமடைந்து டுவிட் போட்ட பூஜா ஹெக்டே!

 இது உண்மையிலேயே ரொம்ப மோசம் என நடிகை பூஜா ஹெக்டே மிகவும் ஆத்திரத்துடன் தனது டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நயன் மேம் டு மனைவி: விக்னேஷ் சிவனின் நெகிழ்ச்சியான பதிவு

நயன்தாராவை முதல் முதலில் 'நானும் ரவுடிதான்' படத்திற்காக பார்த்தபோது நயன்தாரா மேம் என்று கூறிய நிலையில் தற்போது படிப்படியாக உறவு வளர்ந்து, இன்று எனது மனைவியாகி இருக்கிறார்

'ஓடிடியில் ரிலீஸாகும் 'விக்ரம்' வேற மாதிரி இருக்கும்: ஆச்சரிய தகவல்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதை பார்த்தோம். கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி

விக்கி-நயன் திருமணம்: வெளியான முதல் புகைப்படம்

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணம் இன்று காலை நடந்த நிலையில் இந்த திருமணத்தின் முதல் புகைப்படத்தை போட்டோகிராபர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம்