சிவகார்த்திகேயனின்  “SK 20” படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,February 10 2022]

சிவகார்த்திகேயன் நடிப்பில், பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் “SK 20”படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்கியதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் “SK 20” படக்குழுவினர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சிவகார்த்திகேயன் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் “SK 20” படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் இன்று இனிதே துவங்கியது !

2022 புத்தாண்டு கொண்டாட்டமாக சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘SK 20’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து படக்குழு இன்று (பிப்ரவரி 10, 2022) இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது. காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரியில் ஒரே கட்டமாக படமாக்கப்படவுள்ளது. இந்த படப்பிடிப்பில் நடிகர் சத்யராஜ் முதலாக முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள்.

தற்போதைக்கு ‘SK 20’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமான 'ஜதி ரத்னதாலு' படம் மூலம் புகழ் பெற்ற அனுதீப் KV இயக்குகிறார், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பிரமாண்டமாக இப்படம் உருவாகிறது.சுரேஷ் புரடொக்சன்ஸ் சார்பில் திரு.சுரேஷ் பாபு (சிவாஜி கணேசன் நடித்த “வசந்த மாளிகை” பட பிரபல தயாரிப்பாளர் புகழ் D.ராமாநாயுடு அவர்களின் மகன்) நாராயண்தாஸ் நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் SVCLLP (Sree Venkateswara Cinemas LLP) மற்றும் Shanthi Talkies அருண் விஷ்வா ஆகியோர் இணைந்து இப்படத்தை வழங்குகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயனின் படத்திற்கு S.S.தமன் இசையமைப்பது இதுவே முதல்முறை, இது ‘SK 20’ படத்திற்கு ரசிகர்களிடம் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இவ்வாறு படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News

அஜித்தின் 'வலிமை' படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஹூமா குரேஷி!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பதும் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் இந்திய திரையுலகமே மிகப் பெரிய

ரஜினியின் 'தலைவர் 169': சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை நெல்சன் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

முதல்வரை சந்திக்க தனி விமானத்தில் பறந்த திரையுலக சூப்பர் ஸ்டார்கள்!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார்கள் தனி விமானத்தில் பறந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் மகன் இயக்கத்தில் நடிக்க தயார்: விக்ரம் மகன் துருவ் விக்ரம்

விஜய் மகன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க தயார் என விக்ரம் மகன் துருவ் விக்ரம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அம்மா என்று கூப்பிடச்சொன்ன லதா மங்கேஷ்கர்… நெகிழ்ச்சியில் கலங்கும் கிரிக்கெட் பிரபலம்!

இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் இறப்பு இந்திய ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பல லட்சக்கணக்கான வெளிநாட்டு ரசிகர்களையும்