சிவகார்த்திகேயனின் 'எஸ்.கே.20' படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்து வரும் 20 வது படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘எஸ்.கே.20’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் சமீபத்தில் இந்த படப்பிடிப்பு முடிந்ததாகவும் கூறப்படுகிறது
சிவகார்த்திகேயன் ஜோடியாக ராஷிகண்னா நடிக்கும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே.20’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மதுரை அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ’டான்’ திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Gopuram Cinemas is delighted to associate with @SVCLLP @SureshProdns @ShanthiTalkies for the Tamil Nadu theatrical rights of #SK20!??@Siva_Kartikeyan @anudeepfilm@MusicThaman @manojdft @SBDaggubati@Cinemainmygenes
— Gopuram Cinemas (@Gopuram_Cinemas) April 7, 2022
@AsianSuniel#NarayanDasNarang @puskurrammohan@iamarunviswa pic.twitter.com/uYRbDaetnT
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments