சிவகார்த்திகேயனின் 2வது தயாரிப்பு படத்தின் தகவல்கள்

  • IndiaGlitz, [Thursday,November 29 2018]

தமிழ் சினிமா உலகில் குறுகிய காலத்தில் மாஸ் நடிகர் என்ற அந்தஸ்தை பெற்ற சிவகார்த்திகேயன், முதல்முறையாக தயாரித்த 'கனா' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. பெண்கள் கிரிக்கெட் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் 2வது படம் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. விஜய் டிவி புகழ் ரியோராஜ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஷிரின் காஞ்ச்வாலா நாயகியாகவும் முக்கிய வேடத்தில் ராதாரவியும் நடிக்கவுள்ளனர், இந்த படத்தை கார்த்திக் வேணு இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வாகி வருவதாகவும், விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

More News

திரையுலக பிரபலங்களின் பாராட்டு மழையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியாகி வருகிறது. குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பின் ரஜினி ரசிகர்களுக்கு செம விருந்தாக

'தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்' முதல் நாள் சாதனையை '2.0 முறியடிக்குமா?

இந்தியாவில் இதுவரை முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படமாக 'தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்' சாதனை புரிந்துள்ளது. இந்த படம் முதல் நாளில் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளது

தற்கொலை செய்து கொண்ட ஃபேஸ்புக் காதல் ஜோடி: உருக்கமான கடிதம்

ஃபேஸ்புக்கில் பழகி காதலித்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோடு அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி 63: இன்று முதல் தொடங்கிய முக்கிய பணி

தளபதி விஜய் நடிக்கவுள்ள அடுத்த படமான 'தளபதி 63' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது என்பது தெரிந்ததே.

மன்னிப்பு கேட்க முடியாது, உத்தரவாதமும் தரமுடியாது: ஏ.ஆர்.முருகதாஸின் தைரியமான முடிவு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' படத்தில் அரசின் விளம்பர பொருட்களை விமர்சிக்கும் வகையில் காட்சி இருந்ததால் அந்த காட்சிகளுக்கு அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.