இன்று 'பிரின்ஸ்' டிரைலர், இதே நாளில் தான் அந்த சம்பவம் நடந்தது: சிவகார்த்திகேயன்

  • IndiaGlitz, [Sunday,October 09 2022]

சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருக்கும் நிலையில் இதே நாளில்தான் தன்னுடைய ‘டாக்டர்’ என்ற வெற்றி படம் வெளியானது என்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடித்துவிட்ட சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி வெளியாகி 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. சிவகார்த்திகேயன் படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அக்டோபர் 9, எங்கள் ’டாக்டர்’ பட வெளியீடு தினம். எங்களுக்கு மிகவும் சிறப்பான நாள். ரிலீஸ் ஆகி ஒரு வருடம் ஆன நிலையில், நேற்று போல் உணர்கிறேன். திரையரங்குகளில் சிரிப்பு மற்றும் மகிழ்ச்சியான முகங்களால் நிரம்பி வழிந்த நாள் இன்று’ என பதிவு செய்துள்ளார். மேலும் இந்த படத்தை பிளாக்பஸ்டர் ஆக்கிய பார்வையாளர்களுக்கு நன்றி’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அதே அக்டோபர் 9 ஆம் தேதியான இன்று சிவகார்த்திகேயன் நடித்த அடுத்த திரைப்படமான ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாக உள்ள நிலையில் 'பிரின்ஸ்’ திரைப்படமும் 100 கோடி ரூபாய் வசூல் செய்ய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.