சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்': ஃபர்ஸ்ட்லுக் டிரெண்டே முடியாத நிலையில் செகண்ட்லுக்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்து வரும் 20வது திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது என்பதும் ’பிரின்ஸ்’ என்று வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே.
மேலும் நேற்று வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் உலக உருண்டையை சிவகார்த்திகேயன் கையில் வைத்திருப்பது போன்றும், அவரது பின்னால் உலக வரைபடம் இருப்பதையும் பார்த்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது
இந்த நிலையில் ’பிரின்ஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே இன்னும் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ள நிலையில் தற்போது செகண்ட்லுக் போஸ்டருடன் அடுத்த அப்டேட்டும் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என்று அறிவித்துள்ள படக்குழு செகண்ட்லுக் போஸ்டராக ஒரு புதிய போஸ்டரையும் வெளியிட்டு உள்ளது. இந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் மற்றும் உக்ரைன் நடிகை மரியா ஆகிய இருவரும் உள்ளனர் என்பதும் இந்த போஸ்டர் அசத்தலாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
அனுதீப் இயக்கத்தில் தமன் இசையில் உருவாகி வரும் ’பிரின்ஸ்’ திரைப்படம் ’டாக்டர்’ ’டான்’ போன்று 100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The PRINCE??with his PRINCESS ??
— Sree Venkateswara Cinemas LLP (@SVCLLP) June 10, 2022
Here’s a new Poster of the charming duo @Siva_Kartikeyan & #MariaRyaboshapka from #PRINCE❤️
First Single Announcement Loading Soon ??????????@anudeepfilm @MusicThaman @manojdft @Cinemainmygenes @SVCLLP @SureshProdns @ShanthiTalkies pic.twitter.com/VXp00r1sLT
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments