ரிலீசுக்கு முன்பே ரூ.100 கோடி வியாபாரம் செய்த சிவகார்த்திகேயன் படம்: ஹாட்ரிக் வெற்றியா?

  • IndiaGlitz, [Friday,October 07 2022]

சிவகார்த்திகேயன் நடித்த ’பிரின்ஸ்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் ரிலீஸுக்கு முன்னரே கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் வரை வியாபாரம் செய்துவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ மற்றும் ’டாக்டர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் அவரது அடுத்த படத்திற்கு மிகப் பெரிய வியாபாரம் ஆகியுள்ளது.

இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை ரூ.40 கோடிக்கும் தமிழ்நாடு திரையரங்க உரிமை ரூ.45 கோடிக்கும் ஆடியோ உரிமை 4 கோடிக்கும் விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கேரளா, கர்நாடகா மற்றும் ஹிந்தி டப்பிங் உரிமை, வெளிநாட்டு உரிமை ஆகியவை சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ.100 கோடி இந்த படம் வியாபாரமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

’டாக்டர்’ மற்றும் ‘டான்’ படங்களை அடுத்து ’பிரின்ஸ்’ திரைப்படம்ும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து ஹாட்ரிக் வெற்றியை தரும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது என்பதும் அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தீபாவளி விற்பனையில் சக்கைபோடு போடும் 'பொன்னியின் செல்வன்' சேலை” என்ன விலை தெரியுமா?

 மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 7 நாட்களில் உலகம் முழுவதும் ரூபாய் 300 கோடி வசூல்

முதல்முறையாக சந்தானம் செய்த முயற்சி: 'கிக்' படம் குறித்த சூப்பர் தகவல்!

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த பல படங்கள் வெற்றிப் படங்களாக

உடனே அடுத்த படம் ஆரம்பிக்கலாம்: "யானை முகத்தான்"  இயக்குனரிடம் கூறிய யோகி பாபு.. 

"யானை முகத்தான்" படத்தை பார்த்து விட்டு உடனே அடுத்த படம் ஆரம்பிக்கலாம் என நடிகர் யோகி பாபு கூறியதாக இயக்குனர் ரெஜிஷ் மிதிலா பெருமிதத்துடன் கூறியுள்ளார். 

'ஜென்டில்மேன் 2'  ஹீரோ: தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவிப்பு !!

ஜென்டில்மேன் ஃபிலிம் இன்டர்நேஷனல்  கம்பெனிக்காக  கே.டி. குஞ்சுமோன் தயாரிக்க இளம் இயக்குனர் A. கோகுல் கிருஷ்ணா இயக்கும் பிரம்மாண்ட படம் 'ஜென்டில்மேன் 2.

வந்தியத்தேவன் பாடிய மாஸ் பாடல்: ஜிவி பிரகாஷ் வெளியிட்ட புகைப்படம் வைரல்!

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் வந்தியதேவன் என்ற கேரக்டரில் நடித்த நடிகர் கார்த்தி சொந்த குரலில் ஒரு பாடல் பாடி உள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில்