'சர்தார்' படத்தை அடுத்து 'பிரின்ஸ்' ஓடிடி ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,November 14 2022]

சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ மற்றும் கார்த்தி நடித்த 'சர்தார்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் தீபாவளி விருந்தாக கடந்த மாதம் 21ஆம் தேதி வெளியானது என்பது தெரிந்ததே.

இதில் ‘பிரின்ஸ்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் ’சர்தார்’ திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கார்த்தியின் ’சர்தார்’ திரைப்படம் நவம்பர் 18 ஆம் தேதியில் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் ‘பிரின்ஸ்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

‘பிரின்ஸ்’ படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என அந்நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் எதிர்பார்த்த வெற்றியை பெறாத ‘பிரின்ஸ்’ திரைப்படம் ஓடிடியில் வரவேற்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷின் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்து வருகிறது என்பது தெரிந்ததே.

லிவ்-இன் உறவில் இருந்த காதலியை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்த காதலன்!

தன்னுடன் லிவ்-இன் உறவில் இருந்த காதலி, திருமணம் செய்ய வலியுறுத்தியதை அடுத்து அவரை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்த காதலனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பிக்பாஸிடம் செல்ல விளையாட்டு: ரக்சிதாவின் க்யூட் வீடியோ

பிக்பாஸ் இடம் செல்லமாக ரக்சிதா விளையாடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

கார்த்தியின் 'ஜப்பான்' படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

 கார்த்தி நடித்த 'ஜப்பான்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

தனுஷின் 'கேப்டன் மில்லர்': சூப்பர் அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகம்!

தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' மற்றும் 'நானே வருவேன்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கேப்டன் மில்லர்'