ரிலீசாகும் முந்தைய நாளில் 'பிரின்ஸ்' படத்தில் செய்யப்பட்ட திடீர் மாற்றம்!

  • IndiaGlitz, [Thursday,October 20 2022]

சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இன்று அந்த படத்தில் ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ படம் தீபாவளி விருந்தாக நாளை அதாவது அக்டோபர் 21ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன என்பதும் நாளை காலை 5 மணிக்கு இந்த படத்தின் முதல் காட்சி திரையிடப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யு’ சான்றிதழ் கொடுத்தனர் என்பதும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 143 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 23 நிமிடங்கள் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தின் ரன்னிங் டைம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் ரன்னிங் டைம் 11 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 2 மணி நேரம் 11 நிமிடங்கள் என மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. அனுதீப் இயக்கத்தில் தமன் இசிஅயில் உருவாகியுள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.