'பிரின்ஸ்' ரிலீஸ் தாமதத்திற்கு சத்யராஜ் தான் காரணம்: சிவகார்த்திகேயன் அதிர்ச்சி வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,June 21 2022]

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’பிரின்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது முழுவீச்சில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று செய்தி வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக உலக உருண்டையை கையில் வைத்திருந்த சிவகார்த்திகேயனின் போஸ்டர் அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பிரின்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் தீபாவளி அன்று தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

ஏற்கனவே அஜீத்தின் ’ஏகே 61’, கார்த்தியின் ’சர்தார்’ மற்றும் ஜெயம் ரவியின் ’இறைவன்’ ஆகிய படங்கள் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த பட்டியலுடன் தற்போது ’பிரின்ஸ்’ படமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து வெளியாகி வீடியோவில் ’பிரின்ஸ்’ திரைப்படம் ரிலீஸ் தாமதத்திற்கு காரணம் சத்யராஜ் தான் என சிவகார்த்திகேயன் கூறுவதும் அப்போது சத்யராஜ் வரும்போது அவர் கூல் ஆகிவிடுவதுமான காமெடி காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளது.