சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் அட்டகாசமான டைட்டில்!

  • IndiaGlitz, [Monday,March 18 2019]

நடிகர் சிவகார்த்திகேயன் முதல் தயாரிப்பில் உருவான 'கனா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவரது இரண்டாவது தயாரிப்பு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே இன்று காலை பார்த்தோம். அதேபோல் இந்த படத்திற்கு எம்ஜிஆர் நடித்த 'என் அண்ணன்' படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டைட்டிலை விஜய்சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் டிரைலர் போலவே புரமோஷன் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ரியோராஜ், கலையரசன், விக்னேஷ் காந்த், நாஞ்சில் சம்பத் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கார்த்திக் வேணுகோபால் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.
 

More News

கமலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் அரசியல் கட்சி தலைவர்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கூட்டணி, வேட்பாளர்களை அறிவித்து அதிமுக, திமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளும் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில்

சி.கே.குமரவேல் விலகல்: மக்கள் நீதி கட்சி விளக்கம்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அக்கட்சியின் பிரமுகர் சி.கே.குமரவேல் விலகியுள்ள நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது 

தேர்தல் 2019: நடிகை ரோஜாவுடன் மோதும் விஜயகாந்த் பட நடிகை?

நாடு முழுவதும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது,

திமுகவில் இணையும் முன்னாள் அதிமுக அமைச்சர்

1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது  பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் அ.தி.மு.க.வில் இருந்து விலகியுள்ளார். 

கமல் கட்சியின் முக்கிய நிர்வாகி திடீர் விலகல்! நடிகையுடன் கருத்துவேறுபாடு காரணமா?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் குமாரவேல் என்பவர் அக்கட்சியிலிருந்து விலகுவதாக கமல்ஹாசனிடம் கடிதம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது