நம்ம வீட்டு பிள்ளை படத்தின் அடுத்த அப்டேட்

  • IndiaGlitz, [Tuesday,September 03 2019]

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'நம்ம வீட்டுப் பிள்ளை' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் இம்மாதம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த அப்டேட் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற 'காந்த கண்ணழகி' என்ற பாடலின் லிரிக் வீடியோ செப்டம்பர் 6ஆம் தேதி மாலை 6 ம்ணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் சற்றுமுன் அறிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த லிரிக் வீடியோவை வரவேற்க சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன், அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்டி நட்ராஜ், அர்ச்சனா, யோகி பாபு, சூரி, ஆர்கே சுரேஷ், ஆடுகளம் நரேன், ரமா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ஹீரோ' மற்றும் 'நம்ம வீட்டுப்பிள்ளை' ஆகிய படங்களின் அப்டேட்டுக்கள் தினமும் மாறி மாறி ரிலீஸ் ஆகி வருவதால் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் உற்சாகத்துடன் உள்ளனர்.