ஆரம்பமாகிறது 'மாவீரன்' புரமோஷன்.. முதல் அப்டேட் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,February 14 2023]

சிவகார்த்திகேயன் நடிப்பில் ’மண்டேலா’ இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மாவீரன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் பட குழுவினர் அடுத்த கட்டமாக புரமோஷன் பணியை தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சற்றுமுன் படக்குழுவினர் சூப்பர் ஸ்டில் ஒன்றை வெளியிட்டு விரைவில் ‘மாவீரன்’ அப்டேட்களுக்கு தயாராகுங்கள் என்று தெரிவித்துள்ளனர். முதல் கட்டமாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் என்றும் இது குறித்து அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இந்த அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வரும் இந்த படத்தில் மிஷ்கின், சுனில் ஆகிய இருவரும் வில்லன்களாக நடித்து வருகின்றனர். மேலும் நடிகை சரிதா ஒரு முக்கிய குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.