மீண்டும் இணைந்த சிவகார்த்திகேயன் - அனிருத் கூட்டணி.. வைரல் ஆகும் குத்து பாடல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'மாவீரன்’ படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் அந்த பாடல் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடிவரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினார் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் பிறந்த நாளை ஒட்டி அவர் நடித்து வரும் 'மாவீரன்’ திரைப்படத்தின் பாடல் சற்று முன் வெளியாகி உள்ளது.
பரத் ஷங்கர் கம்போஸ் செய்த இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார் என்பதும் கபிலன் மற்றும் லோகேஷ் இந்த பாடலை எழுதியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனின் செம குத்தாட்டத்துடன் உள்ள இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். இந்த படத்தில் மிஷ்கின், சுனில், சரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.
இன்று வெளியாகியுள்ள பாடலின் முதல் சில வரிகள் இதோ:
சீனா சீனா ஆனோமே சீனா
தோனா தோனா நமக்கு ஒரு வழி பொறக்குது தானா
வாண்ணா வாண்ணா வைப் ஆவோம் வாண்ணா
கானா கானா பறையடிச்சிங் பொறக்குது புது கானா
காலம் வந்தாச்சு கைமேல் தந்தாச்சு
கூரை கொட்டாகும் கோல்டு கூடாரம் ஆயிச்சு
ஏய் சீனு சில்லாக்கு இங்க சந்தோஷம் ஃபுல் ஆச்சு
தாளம் தல்லக்கு தார தப்பட்ட தர டோலாக்கு
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com