ஒருபோதும் அடங்காதே, ஓரடி எடுத்து வைத்தால் விடுதலை காற்று: 'மாவீரன்' சிங்கிள் பாடல்..!

  • IndiaGlitz, [Friday,July 07 2023]

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியானது என்பதை பார்த்தோம். சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் பாடியிருந்த அந்த பாடல் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடல் ’வா வீரா’ என்ற பாடல் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. யுகபாரதி எழுதிய இந்த பாடலை பரத் சங்கர் கம்போஸ் செய்துள்ளார். இந்த பாடலை பரத் சங்கர் மற்றும் வைக்கம் விஜயலட்சுமி ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த பாடலின் முதல் ஒரு சில வரிகள் இதோ:

அந்த வானத்தில நீந்தும் மேகத்துக்கு
நான் சொல்லும் கதை தெரியுமா?

இந்த பூமியில உள்ள சாமிக்கெல்லாம்
நான் கத்தி சொன்னா கேட்குமா?

இருளை பாக்காம வெளிச்சம் தெரியாதா?
வலியை தாங்காம வாழ்க்கை புரியாதா?

எத்திசையும் கேட்டிருக்கேன் வழியே கிடையாதா?
கண்ணை திறந்து காத்திருக்கேன், ஒருநாள் விடியாதா?

ஒருபோதும் அடங்காதே, ஓரடி எடுத்து வைத்தால்
விடுதலை காற்று வானில் ஏற்றுமே

வா வீரா வீரா.. வா வீரா வீரா.. வா வீரா..வீரா...

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ள 'மாவீரன்’ படத்தில் மிஷ்கின், யோகி பாபு, சுனில்,சரிதா, குக் வித் கோமாளி பிரபலம் மோனிஷா உள்பட பலர் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

More News

முஸ்லீம் என்பதால் பாகுபாடு இருக்கிறதா? கேள்விக்கு போல்டாக பதிலளித்த பிரபல நடிகை!

பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை ஒருவரிடம் நீங்கள் முஸ்லீம் என்பதால் உங்களுக்கு இந்திய சினிமாவில் பாகுபாடு காட்டப்படுகிறதா?

சொந்த மகனையே பாலியல் வன்கொடுமை செய்த தாய்… 8 வருடமாக நடந்த கோரச் சம்பவம்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காணாமல் போய்விட்டதாக கூறப்பட்ட இளைஞர் ஒருவர் திடீரென கண்டுபிடிக்கப்பட்டு உள்ள நிலையில் 8 வருடமாக அவரது சொந்த தாயே வீட்டிற்குள் அடைத்து வைத்து

இந்தியாவின் காஸ்ட்லி பிச்சைக்காரர்? இவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மும்பை பகுதிகளில் தினமும் பிச்சை எடுத்து வாழ்ந்துவரும் ஒரு நபர் உலகிலேயே மிகப்பெரிய பிச்சைக்காரர் என அறியப்பட்டு இருப்பதோடு அவருடைய வாழ்க்கை முறையைப்

அருண் விஜய்யின் 'மிஷன் சாப்டர் 1' : த்ரில்லிங்கான மேக்கிங் வீடியோ..!

அருண் விஜய் நடிப்பில், ஏ எல் விஜய் இயக்கத்தில், 'அச்சம் என்பது இல்லையே' என்ற படம் உருவாகி வந்த நிலையில் இந்த படத்தின் உரிமையை லைகா நிறுவனம் பெற்ற பிறகு 'மிஷன் சாப்டர் 1'

தற்கொலை முடிவில் டிடிஎப் வாசன்? அவரே வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!

யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎப் வாசன் 'நான் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானால் யாரும் நம்ப வேண்டாம் என்றும் அது கொலை என்று புரிந்து கொள்ளுங்கள்' என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி