'மாவீரன்' ரிலீஸ் எப்போது? சிவகார்த்திகேயனின் மெகா திட்டம்..!

  • IndiaGlitz, [Saturday,February 18 2023]

சிவகார்த்திகேயன் நடித்துவரும் ’மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு சிங்கிள் பாடல் வெளியானது என்பதும் இந்த பாடல் வீடியோ இணையதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ’மாவீரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தகவல் வெளியாகியுள்ளது. ’மாவீரன்’ திரைப்படம் ஜூன் இறுதி வாரத்தில் அதாவது பக்ரீத் விடுமுறை தின நாளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பக்ரீத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை இருப்பதால் அந்த தேதியை பட குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வரும் இந்த படத்தில் மிஷ்கின், சுனில் ஆகிய இருவரும் வில்லன்களாக நடித்து வருகின்றனர். மேலும் நடிகை சரிதா ஒரு முக்கிய குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

ஒரே படத்தில் மனிஷா கொய்ராலா, அதிதிராவ் ஹைத்ரி, சோனாக்சி சின்ஹா.. செம வீடியோ..!

பாலிவுட் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹீரமாண்டி' என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோ

ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள “ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா”: ரசிகர்களின் வரவேற்பு

ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள “ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா” என்ற நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழ் திரைப்பட உலகில் ஒரு புதிய மலேசிய நட்சத்திரம்.

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக்கி வரும் 'மார்க் ஆண்டனி' என்ற திரைப்படத்தில் சமீபத்தில் மலேசியா நடிகர் டி.எஸ்.ஜி நடிக்க இருக்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

மோடி அரசை எதிர்த்து போராடியபோது மலர்ந்த காதல்.. தனுஷ் பட நடிகையின் திருமண புகைப்படங்கள்!

 பிரதமர் மோடி அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய போது தனுஷ் பட நடிகைக்கு காதல் மலர்ந்த நிலையில் அந்த காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. 

ஏஆர் முருகதாஸ் மகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டாரா? குடும்ப புகைப்படங்கள் வைரல் ..!

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏஆர் முருகதாஸின் குடும்ப புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் அவரது மகன் மற்றும் மகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டார்களா என்று ஆச்சரியத்துடன்