சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுவா? 

  • IndiaGlitz, [Friday,May 05 2023]

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான ‘மாவீரன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் ‘மாவீரன்’ திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ‘மாவீரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி ‘மாவீரன்’ படத்தை ஜூலை 14ஆம் தேதி வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஜூலை 28ஆம் தேதி விஷாலின் ’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே ‘மாவீரன்’ ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ள 'மாவீரன்’ படத்தில் மிஷ்கின், யோகி பாபு, சுனில் உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் நடிகை சரிதா ஒரு முக்கிய குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.